கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் பங்கேற்று பேசினார். அப்போது இருதரப்புக்கு இடையே மோதல் உருவானது. இதுதொடர்பாக அமீர் மீதும், தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அதன் செய்தியாளர் மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தன் மீது போடப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி அமீர் கோவை நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அமீருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் அமீர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வழக்கில் முன் பிணை வழங்கப்பட்டதன் அடிப்படையில் ஜாமிந்தாரர்கள் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். திங்கட்கிழமை தோரும் காலை சென்னை பூக்கடை வீதி காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும்.
ஜனநாயக நாட்டில் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்க நினைப்பது சர்வதிகாரப்போக்கு. அது நீடிக்காது. ஆரம்பத்திலிருந்து நம்புவது நீதிமன்றங்கள் தான். நீதிமன்றத்திற்கு வாழ்த்துக்களும், நன்றியும். என் தரப்பில் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக போராட்டக்காரர்களுக்கு எதிராக 10 பேரை தயார் செய்துள்ளனர். அப்போது தான் தேர்தலை சந்திக்க முடியும். யாரும் யாரையும் தூண்டி விட முடியாது. இவ்வாறு கூறினார்.