நடிகர் ரஜினிகாந்த் இன்று ஒரு வார பயணமாக அமெரிக்கா புறப்படுகிறார். அவர் அமெரிக்கா புறப்படும் முன் தனது போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
முன்னதாக ரஜினிகாந்தை துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஜினி, ‘’குருமூர்த்தி எனக்கு 25 ஆண்டுகால நண்பர். அடிக்கடி நாங்கள் சந்தித்துக்கொள்வோம். இன்றைய சந்திப்பில் ஸ்பெஷல் ஒன்றும் கிடையாது.
பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சினங்களை தாங்கித்தான் ஆகவேண்டும். நான் அரசியலுக்கு வருவதை பற்றி பலர் விமர்சிப்பதை பற்றி எனக்கு கவலையில்லை. இன்றைக்கு கூட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மன்ற ஆலோசனைக்கூட்டங்களில் பேசியதை வெளிப்படையாக சொல்ல முடியாது.
பெண் செய்தியாளர் குறித்து எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து மன்னிக்க முடியாத குற்றம்.
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது சீருடையில் இருக்கும் காவலரை தாக்கியது கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் மீது கை வைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம். அதே நேரம் சட்டம் தன் கையில் இருக்கு என்பதற்காக காவல்துறையினரும் வரம்பு மீறி நடந்துகொள்ளக்கூடாது.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் வெட்கப்படவேண்டிய ஒன்று. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.