







குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளி கிழமை சென்னை வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசாா் தடியடி நடத்தினா். இதை கண்டித்து தமிழகம் முமுவதும் பல்வேறு இடங்களில் போராட்டன் தீவிரமடைந்தது. அன்றுமுதல் தொடந்து வண்ணாரப்பேட்டையில் நடந்துவரும் போராட்டம் இன்றோடு 7வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு அரசியல் பிரமுகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் போராட்ட களத்துக்கு வந்து உரையாற்றினார்.