இன்று தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடை பெற இருக்கிறது.இந்த கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப் பெரும் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு எம்.எல்.ஏ.க்களிடம் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.இந்த நிலையில் தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சில முக்கிய நடவடிக்கைகள் கட்சி சார்ந்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை அல்லது இரட்டை தலைமை குறித்து ராஜன் செல்லப்பா பேட்டி கொடுத்தது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் ஒற்றை தலைமை அல்லது இரட்டை தலைமை கீழ் அதிமுக செயல்படுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டம் அதிமுக வினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு கொடுக்கப்படாததால் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு விளக்கம் அளித்துள்ளனர்.