
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 22 எதிர்க்கட்சிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற பேச்சுகள் எழுந்து பின்னர் அடங்கின. காரணம் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிரிய கமிட்டி ஆகிய கட்சிகள் ஒருபுறமும், மறுபுறம் மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் என இப்படி எதிர்க்கட்சிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். ஒரு ஒரு குழுவாக இருந்தால்தான் பாஜகவை வலுவாக எதிர்க்க வாய்ப்பு உண்டாகும். இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைமைகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். இது தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும்படியும், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்துள்ள அனைவரும் ஒருமித்த ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.