Skip to main content

கே.எஸ்.அழகிரிக்கு 'உதவி' என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாது: பா.ஜ.க. கடும் தாக்கு!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

congress-bjp

 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பிரச்சார அணிச் செயலாளர் வே. ராஜரத்தினம் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது, வங்கியில் தொழில் கடன் பெறுபவர்கள் உதவி பெறும் விதமாக பா.ஜ.க. ஆரம்பித்துள்ள வலைத்தளத்தைப் பற்றி பேசுவதற்குக் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரிக்கு தகுதியில்லை. விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. அழகிரிக்கு உதவி என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாது. சட்டரீதியான உதவிகளைக் கூட தன் ஊருக்கு, தன் இயக்கத்திற்கு, பொதுமக்களுக்கு செய்ததாக அவர் வாழ்க்கையில் கிடையாது. 

 

அவர், தான் பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு அவர் வாங்கிய கடன் மற்றும் அதைச் செலுத்திய விவரங்களை வெளியிட்டால் அவரின் நேர்மையை மதிக்க தயாராக உள்ளோம். பாரதிய ஜனதா கட்சியினர் இடைத்தரகராகச் செயல்படவில்லை. கடன் பெறுவோர் வங்கிக்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க, இலவசமாகத் தொழில் அறிக்கை தயாரிக்க உதவுகிறது. தகுதியான நபருக்கு வங்கிக் கடன் அளிக்க தவறும் பட்சத்தில் அதை நிதி அமைச்சரிடம் கவனத்திற்கு எடுத்துச்சொல்ல கட்சிக்கு உரிமை உள்ளது. கே.எஸ்.அழகிரி பா.ஜ.க. வங்கிக் கடன் வலைத்தளத்தை விமர்சிப்பது சாத்தான்கள் வேதம் ஓதுவது போல் உள்ளது எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்