வேறு கட்சியை சேர்ந்த 4 பேர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுபடி ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என தெரிவித்தது. மேலும் விதிகளின்படியே வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்கப்பட்டதால், இதனை ஒரு தேர்தல் வழக்காகதான் தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பேசிய நீதிபதிகள், "ஒரு தேர்தலில் வாக்குறுதிகள், வேட்பாளர்களை கடந்து சின்னங்கள் தான் முக்கிய பங்காற்றுகின்றன. அப்படியிருக்கும் போது உறுப்பினராக இல்லாதவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா?" என கேள்வியெழுப்பினார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோர் விளக்கமளிக்க கோரி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.