!['' The general meeting will be held ... He will be elected with one mind '' - Pollachi Jayaraman Information!](http://image.nakkheeran.in/cdn/farfuture/IUy-O8XTxZnLvEwDs4jQ4uuLGn7e4iOEP6_qW_wZkro/1655651021/sites/default/files/inline-images/y12.jpg)
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான வலியுறுத்தல் எழுந்திருக்கும் நிலையில், தற்பொழுது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தனித்தனியாக பலமுறை ஆலோசனையில் ஈடுபட்டனர். தற்போது வரை இந்த ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அதிமுக நிர்வாகிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'உறுதியாக பொதுக்குழு நடைபெறும். அதேபோல் ஒற்றைத் தலைமையும் தேர்வு செய்யப்படும்' என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.