காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருப்பவர் வீரபாண்டி. இவர் மாஜி தலைவர் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளர். இவருக்கும், தி.மு.க., வடசென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபுவுக்கும் ஏற்பட்ட முட்டல், மோதல் விவகாரங்கள் மத்திய சென்னையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

KS-Alagiri

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இப்போதைய கள நிலவரப்படி மத்திய சென்னையில் தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் புறக்கணிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து திருநாவுக்கரசர் போட்டியிடும் திருச்சியில் பிரசார பணிகள் முடக்கப்படும் என தி.மு.க., ‘ரெட் அலர்ட்’ விடுத்து இருக்கிறதாம்.

இப்பிரச்னையை சமாளிக்க வீரபாண்டியை நீக்கிவிட்டு, இளங்கோவன் ஆசி பெற்ற மாஜி மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யத்தை மாவட்ட பொறுப்பாளராக நியமிப்பது குறித்து, தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.