Skip to main content

கை சின்னத்திற்கு வாக்கு கேட்ட எடப்பாடி பழனிச்சாமி!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 

    

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஹெச்.ராஜாவிற்கு வாக்கு சேகரிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காரைக்குடிக்கு வருகின்றார் என்றவுடனேபோக்குவரத்தை மாற்றி அமைத்தது.. துணி போர்த்தி மூடிவைக்கப்பட்ட எம்ஜிஆர்  சிலையை திறந்தது என காலையிலிருந்தே அப்பட்டமான தேர்தல் விதிமீறல்களை செய்தது தமிழகத்தில் ஆளும் அரசு.


 

eps



காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் பிரச்சாரம் என்றவுடன் ரூ.200க்கு ஆட்களை கூட்டி வந்து அவ்விடத்தை நிரப்பியவர்கள் கூட்டம் கலையாமல் இருக்க குத்து டான்ஸையும் வைத்திருந்தனர். எனினும் நேரம் ஆக ஆக கூட்டம் கலைந்தது.

    

இதோ வந்துவிட்டார் அதோ வந்துவிட்டார் என இரவு 7 மணியிலிருந்து கூவி அழைத்த நிலையில் சரியாக இரவு 9.40க்கு பிரச்சாரப்பகுதிக்கு வந்தவர், வழக்கமான தனது ஸ்டீரியோ டைப்பிலான பேச்சை பேசிவிட்டு, திமுக தலைவர் ஸ்டாலினையும் ஒரு பிடி பிடித்துவிட்டு, " அண்ணன்  ஹெச்.ராஜாவிற்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரியுங்கள்." 

 

eps

என கையை பல தடவை தூக்கிக் காட்டி வாக்கு சேகரித்து விட்டு நகர்ந்தார். "ஆமா.! இவரு தாமரை சின்னத்திற்கு வாக்குக் கேட்டாரா.? இல்லை கை சின்னத்திற்கு வாக்கு கேட்டாரா.?" என்கின்ற அங்கிருந்த அனைவருக்கும் ஏற்பட்டது என்னவோ நிஜம் தான்.


 

சார்ந்த செய்திகள்