Skip to main content

மது குடிப்போர் சங்கம் வாங்கிய வாக்குகள் தெரியுமா? அரசியல் கட்சியினர் அதிர்ச்சி!

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்  ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். இந்த மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 

 

election



இந்நிலையில்  திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்)-  4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் (ஏ.சி.சண்முகம்)- 4,77,199 வாக்குகளும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர்(தீபலட்சுமி)- 26,995 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளரை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வேலூரில் சுயேட்சையாக தமிழ்நாடு மதுகுடிப்பேர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பிலும் ஒரு வேட்பாளர் போட்டியிட்டார். அவருக்கு 2530 வாக்குகள் கிடைத்துள்ளது என்பதுதான் வியப்பாக உள்ளது. இதுகுறித்து அந்த வேட்பாளர் டாஸ்மாக் விரும்பிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். 


மேலும் இது குறித்து அறிக்கை ஒன்றை அக்கட்சி சார்பாக வெளியிட்டுள்ளார். அதில் 2530 வாக்குகள் அள்ளிதந்த வாக்காளர்களுக்கு நன்றி நன்றி. வேலூர் மக்களவை வாக்காளர்களுக்கும், டாஸ்மாக் மது பிரியர்களின் குடும்பங்களுக்கும் இதயபூர்வமான நன்றியை பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். என் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் பாசமிகு நண்பர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் இதயபூர்வமான நன்றி நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மது குடிப்போர் சங்கத்துக்கு 2530 வாக்குகள் விழுந்ததை அரசியல் கட்சியினரும் மற்ற சுயேட்சை வேட்பாளர்களும் வியப்புடன் பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்