திமுக ஆட்சியில் திருப்தி இல்லை என்கின்றார்கள் மக்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அண்மையில் ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ளதை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ''8 மாத கால திமுக ஆட்சியில் திருப்தி இல்லை என மக்கள் கூறுகின்றனர். நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் மத்திய அரசு சொல்வதைக் ஆளுநர் கேட்கிறார். நாம் தலைவர்களைத் தேடக்கூடாது. சமூக சேவகர்களைத்தான் தேடவேண்டும். ரவுடிகளுக்கு பயம் வர வேண்டும். அது நேர்மையால் மட்டுமே முடியும்'' என மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே கமல்ஹாசன் பேசியுள்ளார்.