Skip to main content

தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த 20 வயது பெண்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/03/2025 | Edited on 23/03/2025

 

Police investigating intensively 20-year-old woman found hang in uttar pradesh

20 வயது பெண் ஒருவர், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பாலியா பகுதியைச் சேர்ந்தவர் பூஜா சவுகான் (20). இவர் தனது ஊரில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீஸுக்கு தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூஜாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூஜாவின் கைகள் பின்னால் கட்டப்பட்டும், கால்கள் தரையில் இருந்து சுமார் 6 அடி உயரத்தில் தொங்கப்பட்டு இருந்ததால், இது கொலை என போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பூஜாவின் பெற்றோர் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருந்ததால், பூஜா தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் என்பது தெரியவந்தது. 

சார்ந்த செய்திகள்