Skip to main content

இஷான் கிஷனின் அதிரடி சதம்; ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!

Published on 23/03/2025 | Edited on 23/03/2025

 

Hyderabad beats Rajasthan to record huge win in ipl 2025

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 18வது சீசன் நேற்று (22-03-25) கோலகலமாகத் தொடங்கியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று (23-03-25) ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகளிடையே ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்து வீச தீர்மானித்தது. அதன்படி, ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, அபிஷேக் ஷர்மா 11 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்து 24 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 47 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடித்து 106 ரன்கள் எடுத்து அவுட்டாமல் களத்தில் நின்றார். டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்து 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், 20 ஓவர் முடிவில், 6  விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 286 ரன்கள் எடுத்தது. 

இதில் ராஜஸ்தான் அணி சார்பில், துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், மகேஷ் தீக்ஷனா 2 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர். 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அதில், சஞ்சு சாம்சன் 37 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து 66 ரன்கள் எடுத்து அவுட்டானார். துருவ் ஜூரல் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடித்து 70 ரன்கல் எடுத்து அவுட்டானார். ஷிம்ரோன் ஹெட்மியர் 23 பந்துகளில் 1 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடித்து 42 ரன்கள் எடுத்தார். ஷுபம் துபே 11 பந்துகளில் 1 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடித்து 34 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் நின்றார். இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.