அதிமுகவின் 51ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஜெயலலிதாவைத் தனது கட்டுப்பாட்டில் சசிகலா வைத்திருந்தார். பல நாடுகளிலிருந்து வந்த மருத்துவர்கள் அவருக்கு இதயக் கோளாறு இருந்ததையும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியதையும் கூறினர். ஆனால் அதை சசிகலா மறுத்துவிட்டார். அதனை மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
ஜெயலலிதாவின் உடல்நலம் குன்றி மருத்துவமனையிலிருந்த போது ஜெயலலிதாவிற்குத் தொண்டு செய்ய இறைவன் ஒரு வாய்ப்பினை கொடுத்திருந்தார். அந்த வாய்ப்பினை அவர் பயன்படுத்தினாரா என்று சொன்னால், இல்லை.
மௌனமாக இருந்தார். ஏனென்று சொன்னால், ஜெயலலிதா உடல் நலம் குன்றி இருந்தார். ஆட்டிப் படைக்கக்கூடிய சசிகலா நல்ல நிலையிலிருந்தார். ஜெயலலிதா தேவையா, சசிகலா தேவையா, என்று வருகின்ற போது சசிகலா தேவை என்று சசிகலா சொல்வதைக் கேட்டு அமைதியாக இருந்தார் ஓபிஎஸ். அங்கே இவரால் தர்மம் செத்து விடுகிறது. தர்மம் செத்தது மட்டும் அல்ல ஜெயலலிதாவும் மறைகிறார்” எனக் கூறினார்.