தி.மு.க. முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்த டி.ஆர்.பாலுவுடன் கூடுதலாக, புதிதாக நியமிக்கப் பட்டுள்ள கே.என்.நேருவையும் சேர்ந்து பணியாற்றச் செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்றன. முதன்மைச் செயலாளர் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என தடாலடியாக டி.ஆர்.பாலு சொல்லிவிட்டாராம். இதையடுத்து அந்த பதவியை கே.என்.நேருக்கு மட்டும் கொடுத்துவிட்டது திமுக. இதன் காரணமாக டி.ஆர்.பாலு அதிர்ப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கே.என்.நேருக்கு பதவி வழங்கப்பட்டது குறித்து முரசொலியில் தலைமைக்கழக அறிக்கை வெளியானது. அதில் டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருப்பதால் முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, கே.என். நேரு நியமிக்கப்படுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது ஒரு புறம் புகைந்து கொண்டிருக்க, அருண் நேருவுக்கு இளைஞரணியில் முக்கிய பதவி கிடைக்கப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருமண விழாவிற்காக கே.என்.நேருவின் மகன் அருணை மையமாக வைத்து திருச்சியில் போஸ்டர் ஒட்ப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.