Skip to main content

திமுக வசமானது ஈரோடு யூனியன்!!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

DMK has won Erode Union

 

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் ஆறு கவுன்சிலர்கள். இந்த பதவிக்கான தேர்தல் சென்ற 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தி.மு.க, அ.தி.மு.க தலா மூன்று இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் மூன்று முறை தேர்தல் தேதி அறிவித்தும் திமுக உறுப்பினர்கள் மட்டுமே வந்து இருந்தனர்.  அ.தி.மு.க உறுப்பினர்கள் வராததால் தேர்தல் தள்ளி போனது. இந்த நிலையில்  4 வது வார்டு அ.தி.மு.க உறுப்பினர் திடீரென இறந்து விட்டார்.

 

இதனால் அ.தி.மு.க.வின் பலம் இரண்டாகவும் தி.மு.க.வின் பலம் 3 ஆகவும் இருந்தது. அடுத்து மீண்டும் 4 - வது வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது.  தி.மு.க. சார்பில் 4 -வது வார்டில் போட்டியிட்ட விவேகானந்தன் வெற்றி பெற்றார். இதனால் தி.மு.க.வின் பலம் 4 ஆக உயர்ந்தது. இதையடுத்து ஈரோடு ஊராட்சி மன்றத்தின் தலைவர் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 22 ந் தேதி காலை ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.  முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

 

கவுன்சிலர்கள் அனைவரும் வந்திருந்தனர்.  தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வட்டார வளர்ச்சி அலுவலர் பசீர் அகமது முன்னிலையில்  நடைபெற்றது. அதில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக திமுக சார்பில் 1-வது  வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேரோடு பிரகாஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல் துணைத் தலைவராக தி.மு.க. சார்பில் 4 -வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  விவேகானந்தனும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்