நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள கலுங்கடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளே நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரை விசாரணைக்காக அழைத்துச்சென்ற நாங்குநேரி காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கன்னியாகுமாரி நாடாளுமன்ற உறுப்பினரான வசந்தகுமார் இடைத்தேர்தல் நடக்கும் போது விதிகளை மீறி நாங்குநேரி பகுதிக்குள் வந்ததாக காவல்துறையினர் விசாரணைக்காக கூட்டிச்சென்றனர். இதனையயடுத்து, தேர்தல் நடக்கும் போது வாக்கு சேகரித்தது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


அதன் பின்னர் அவரை போலீஸார் இரு நபர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த நடவடிக்கை குறித்து குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எம்.பி. வசந்தகுமார், "பாளையங்கோட்டையில் எனது வீடு உள்ளது. எனது வீட்டுக்குச் செல்வதற்காக நான் இவ்வழியாகக் காரில் வந்தேன். ஒரு எம்.பி.யான நான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்ற காரணத்தால் அந்த தொகுதியின் வழியாக சாலையில் நடந்து செல்லக்கூட உரிமை இல்லையா? ஆளுங்கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனாலேயே அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்" என்று கூறினார்.