Published on 31/03/2022 | Edited on 31/03/2022

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், ஜி.எஸ்.டி. இழப்பீடு மற்றும் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மேகதாது அணைத் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் அவர் முன்வைக்க உள்ளார்.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.