Published on 02/06/2022 | Edited on 02/06/2022

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க உள்ளார். துணை வேந்தர் நியமன மசோதா உள்ளிட்ட நிலுவையிலுள்ள பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கோரி அந்தச் சந்திப்பில் அவர் வலியுறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகை ராஜ் பவனில் நடைபெறும் இந்தச் சந்திப்பு மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலர் கலந்துகொள்ள உள்ளனர்.