
சி.ஆர்.பி.எஃப் பணிக்கான கணினித் தேர்வைத் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் நடந்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சி.ஆர்.பி.எஃப் பணிக்கான கணினித் தேர்வைத் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் நடந்த வேண்டும். சி.ஆர்.பி.எஃப் பணிக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் சி.ஆர்.பி.எஃப். கணினித் தேர்வை நடத்த வேண்டும். மொத்தமுள்ள 9,212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன. அப்படி இருக்கும் நிலையில் தமிழக இளைஞர்கள் எப்படித் தேர்வு எழுதுவார்கள் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் சி.ஆர்.பி.எஃப் பணிக்கான தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தி மற்றும் 13 மாநில மொழிகளில் மத்திய காவலர் தேர்வு 2024 ஜனவரி 1 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி என சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.