Published on 08/02/2020 | Edited on 08/02/2020
விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி 2 வது சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் சூட்டிங் தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்து சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அதனையடுத்து தற்போது இன்று மீண்டும் என்எல்சி 2 வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சரவணசுந்தரம் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![bjp](http://image.nakkheeran.in/cdn/farfuture/V9msuJZ3PkX-Up30VH2qqwKTBwxpmYzlZAxfrKg0AS0/1581136655/sites/default/files/inline-images/image%20%2825%29.jpg)
![bjp](http://image.nakkheeran.in/cdn/farfuture/r6MmXjSqa0h_pdcP3KyAuaJqFVZG6z7uda9kjrgt27c/1581136757/sites/default/files/inline-images/image%20%2826%29.jpg)
பாஜகவினர் போராட்டம் குறித்தும், நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,இந்த போராட்டம் தவறானது. Income tax நடைமுறை வழக்கமானது. அதை ஆதரித்து கட்சி ரீதியான போராட்டம் நம் மதிப்பை குறைக்கும் என்றும், தலை இல்லாததால் வால்கள் ஆடுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். இதில் தமிழக பாஜகவிற்கு இன்னும் தலைவர் நியமிக்கப்படாதது குறித்து பேசுவது போல் தலை இல்லாததால் வால்கள் ஆடுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் எஸ்.வி.சேகரின் இந்த கருத்துக்கு பாஜகவினர் பலர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக கட்சியில் இருந்து பாஜக கட்சியையே எஸ்.வி.சேகர் விமர்சித்து பேசியதால் பாஜகவினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்டுகிறது.