மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் பிறந்தநாள் விழா திருச்சியில் மிகவும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. கலைஞர் அறிவாலயத்தில் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் செய்தனர். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கொடியேற்றி வைத்தார். கலைஞர் படத்திற்கு மலர் தூவினர். திருச்சி மாவட்டச் செயலாளர்கள் அன்பில் மகேஷ், காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, நகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் கே.என்நேரு, கரோனோ ஊரடங்கு இருப்பதால் அனைவரையும் அழைத்து கொண்டாட முடியவில்லை. ஆனாலும் கழகத் தோழர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும், கழக முன்னோடிகளைச் சந்தித்துப் பொற்கிழிகள், கொடுத்து சிறப்பித்தார்கள்.
எப்ப மழை வரும் என்று பார்த்து தண்ணீர் திறந்து விடும்போது தான் குடிமராமத்துப் பணி ஆரம்பிக்கின்றனர். தொடர்ந்து இப்படிச் செய்கின்றனர். டெல்டா கடைக்கோடி வரை தண்ணீர் செல்லும் என்கிறார்கள். மொத்தம் 45 கி.மீ, வாய்காலில் 20,000 கி.மீட்டர் வாய்கால் மாயமாகி உள்ளது. ஜனவரி, பிப்ரவரியில் ஆரம்பித்திருந்தால் விவசாயிகளுக்குப் பயன் உள்ளதாக இருந்திருக்கும். அவசரக் கதியில் செய்தால் யாருக்கும் சரியாக இருக்காது என்றார்.