Skip to main content

‘தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் மிரட்டுறாங்க’; திமுக ஒ.செ மீது ஊராட்சி மன்றத் தலைவர் புகார்!

Published on 13/03/2023 | Edited on 14/03/2023

 

Being a low caste, they threaten you. Panchayat council president complains about DMK district president

 

ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற நாள் முதல் என்னை பணி செய்ய விடாமல் தடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் கொடுப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் தன் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் குடும்பத்தினருடன் சென்று மனு கொடுத்தார்.

 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கெங்கநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார். இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் இன்று (மார்ச் 13ஆம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் முகாமிற்கு வருகை தந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியனிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘அணைக்கட்டு ஒன்றிய திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் அணைக்கட்டு ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கெங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரியில் தூர் வாருகிறேன் என்று கூறி மண் அள்ளி விற்று வருகிறார்கள். அதை நான் தலைவர் என்ற முறையில் கேட்டதற்கு நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்தால் என்னை கேவலமாக மூன்றாம் தர வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி பதவியில் இருந்து எடுத்து விடுவேன் என மிரட்டுகிறார்கள்.

 

மேலும், அடியாட்களை வைத்து என்னை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். நான் தாழ்த்தப்பட்டவன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். எனவே அரசு விதிகளை மீறி ஏரியில் மண் எடுக்கும் நபர்கள் மீதும் அரசின் பொது சொத்துகளை சேதப்படுத்தியதற்காகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீதும் அதற்கு காரணமாக இருந்த வெங்கடேசன், மகாலிங்கம், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்