Published on 21/11/2020 | Edited on 21/11/2020

காங்கிரஸின் மகளிர் அணியின் முன்னாள் தேசிய செயலாளர் அப்சரா ரெட்டி நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இதற்கு முன்னதாகவே இவர், 2016ஆம் ஆண்டே அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனால் அதன்பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தார். பின் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் மகளிரணி தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் அவர் காங்கிரஸிலிருந்து விலகி நேற்று அதிமுகவில் இணைந்துள்ளார்.