Published on 10/06/2019 | Edited on 10/06/2019
எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கையை உளவுத்துறை மூலம் கண்காணிக்க சொல்லுக்கும் எடப்பாடி. கடந்த 3-ந் தேதி தன்னை சந்திச்ச எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளிட்ட கட்சிப் புள்ளிகளிடம், தேர்தல்ல தமிழகம் முழுக்கவே அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கி சரிஞ்சிருக்கு. இதுக்கான காரணம் என்னன்னு நாம கண்டுபிடிச்சாகணும்னு சொல்லியிருக்கார். அதுக்குக் கட்சிப்புள்ளிகள் பலரும், பா.ஜ.க., பா.ம.கவோடு கூட்டணி வச்சதுதான் காரணம்னு சொல்லியிருக்காங்க.
![eps](http://image.nakkheeran.in/cdn/farfuture/-4MutScUPQ2-0FFM_xD8Vufik2OXSB9EkyokuvT_Oes/1560152137/sites/default/files/inline-images/328.jpeg)
இதைக்கேட்ட எடப்பாடி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் தனிச்சி நின்னா ஜெயிக்க முடியுமா?ன்னு அவங்ககிட்ட திருப்பிக் கேட்ட தோடு, ஒரு பிரமுகரைப் பார்த்து கொந்தளிச்சிட்டாராம். அந்த பிரமுகர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தான். உங்களால்தான் அ.தி.மு.க. கோட்டையான கொங்கு மண்டலமே நமக்கு எதிரா நிக்கிது. கொங்கு மண்டலத்தில் கோவை யைத் தாண்டி பா.ஜ.க. மேலும் சில சீட்டுகளைக் கேட்டப்ப, அது எங்க கோட்டைன்னு தரமறுத்தோம். ஆனா, அங்கேயே நமக்குப் படு தோல்வி. இதுக்குக் காரணம் நீங்க தான் என்று திட்டி தீர்த்து விட்டாராம் எடப்பாடி.மேலும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.