நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், என்னை விளையாடவிட்டு பார். நாட்டில் எப்படி விவசாயிகளை மறைத்தார்களோ, அப்படி நாங்கள் எடுத்து வைக்கும் எண்ணங்களையும் மறைக்கிறார்கள், தேர்தலில் எங்கள் சின்னத்தையும் மறைக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை. ஒன்னுமில்லாத சின்னமெல்லாம் பளிச்சென்று தெரிகிறது. விவசாயி சின்னம் மங்கலாக தெரிகிறது. இந்த சின்னத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் இந்த சின்னம் ஒரே நாளில் உலகம் முழுவதும் போய் சேர்ந்தது. எதை கொடுத்தாலும் கொண்டுபோய் சேர்க்கிறார்களே என்று மங்கலாக போட்டுள்ளார்கள்.
என்னைப் பார்த்து ஏன் பயம்? நான் ஒரு சாதாரண பையன் என்னை பார்த்து ஏன் நடுக்கம்? நீங்க நல்லவனாக இருந்தால் என்னை விளையாட விட்டு பாருங்கள். அந்த துணிவு இல்லையே உங்களுக்கு. நாட்டில் எப்படி விவசாயத்தை ஒழித்தார்களோ, விவசாயிகளை ஒழித்தார்களோ, அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார்களோ, அதுபோல நாங்கள் எடுத்து வைக்கின்ற எண்ணங்களை மறைக்கிறார்கள். தேர்தலில் எங்களது சின்னத்தையும் மறைக்கிறார்கள்.
இந்தியாவை 50 ஆண்டுகாலம் ஆண்ட கட்சி காங்கிரஸ். 50 ஆண்டுகளாக செய்யாத சாதனையை இன்னும் ஐந்து வருடத்தில் என்ன செய்யப்போகிறார்கள். ஏழைகளுக்கு 72 ஆயிரம் வங்கிக் கணக்கில் போடுவோம் என்கிறார்கள். எதனால் ஏழையானார்கள். 50 அண்டுகாலம் இவர்கள் ஆண்டதினால் ஏழையானார்கள். ஒரு மணி நேரம் ஒரு குடிசையில் உட்கார்ந்துவிட்டு வந்த ராகுல்காந்தியை பெரிய தலைவர் என்கிறார்கள். பிறந்ததில் இருந்து அதே குடிசையில் இருக்கிறோமே நாங்கள் எவ்வளவு பெரிய தலைவர்கள். 18 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் இருந்த கட்சி திமுக. அப்போது செய்யாத திமுக இப்போது என்ன செய்யப்போகிறது. இவ்வாறு பேசினார்.