ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவிற்கு வாக்கு சேகரிப்பதற்காக அத்தொகுதிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றார். இதற்காக தூத்துக்குடியில் இருந்து பிரச்சாரத்திற்கு புறப்படலாம் என்றும் கோரம்பள்ளம் பகுதியில் சத்தியா ரிசார்ட் எனும் விடுதியில் இருந்து புறப்படுவது என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை அங்கு தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதேபோல் அண்மையில் திருப்பரங்குன்றத்தில் அமமுகவின் தங்கத்தமிழ்செல்வன், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் தங்கியிருந்த விடுதியிலும் சோதனை நடைபெற்றது.
![thangathamizhselvan](http://image.nakkheeran.in/cdn/farfuture/t9_q-Yu7gnW-Qg3BiwKvlxkuM_bBXPNXxfvpSlx7lJI/1557901401/sites/default/files/inline-images/thangathamizhselvan.jpg)
இதுகுறித்து தங்கத்தமிழ்செல்வனிடம் கேட்டப்போது, “சோதனை நடத்துவதை நாங்கள் தவறு சொல்லவே இல்லை. ஆனால், இங்கு நடத்துவதுபோல் அதிமுக அமைச்சர்களின் வாகனங்களிலும் வீடுகளிலும் நடத்துங்கள். போலீஸ் வாகனத்திலும் நடத்துங்கள் என்றுதான் சொல்லுகிறோம். பணம் தருபவர்களைவிட்டுவிட்டு பணம் தராதவர்களை பிடித்து ரெய்டு நடத்தினால் எப்படி உண்மை தெரியவரும்.”
தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாலமுருகவேல், முதலமைச்சரை டிடிவி தினகரன் ஒருமையில் பேசுகிறார். உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புகிறார். பல்வேறு விவகாரங்களை கொண்ட நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கிறார். ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுகிறார். அதனால் தேர்தல் நடத்தைவிதிகளின் படி அவர்மீது நடவடிக்கை எடுத்து அவர் பிர்ச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளாரே?
“நேற்று இந்த நேரம் தேமுதிகவில் இருந்து அதிமுகவிற்கு வந்து இன்று அதிமுகவிற்காக இவ்வளவு உழைக்கிறார் என்றால் நிச்சயம் அவரை பாராட்டியாக வேண்டும். ஆனால், தேனி தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் வேட்பாளராக நிற்கும்போது பிரதமர் பிரச்சாரத்திற்காக வந்தார். அப்போது 8 மணி நேரமாக போக்குவரத்து தடை செய்தார்களே அப்போது ஆம்புலன்ஸ் போகவில்லையே இதனை எங்குபோய் புகார் செய்வது. இது மட்டும் நியாயப்படி நடக்கிறதா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.