


Published on 07/10/2020 | Edited on 07/10/2020
அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்று காலை 10 மணிக்கு முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவிக்கும் நிலையில்; அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் முன்பாக அக்கட்சியின் தொண்டர்கள் அதிகளவில் குவிந்துவருகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக அதிகளவு போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு குவிந்திருக்கும் தொண்டர்கள் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். உருவங்களை தங்களது உடலில் வரைந்துகொண்டு வீதிகளில் ஆடிவருகின்றனர்.