Skip to main content

500 பேருக்கு வேலைவாய்ப்பு ;1385 கோடி செலவில் புதிய திட்டம்; முதல்வர் துவக்கி வைத்தார்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

1385 crore new project; The Chief Minister inaugurated employment for 500 people

 

திருச்சி மாவட்டம் மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் உலகத்தரம் வாய்ந்த வன்மரக்கூழ் ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

 

முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் உள்ள மொண்டிப்பட்டியில் காகித ஆலையின் அலகு II ஐ திறந்து வைத்தார். வன்மரக்கூழ் தயாரிக்கும் பிரிவு 400 மெட்ரிக் டன் திறன் கொண்டது. ரசாயன மீட்பு கொதிகலன் பிரிவு மற்று 20 மெகா வாட் மின் ஆக்கிப் பிரிவு ஆகியவற்றையும் திறந்து வைத்தார். ரூபாய் 1385 கோடி செலவில் இத்திட்டம் நிறுவப்பட்டுள்ளது.

 

இந்த ஆலையின் விரிவாக்கத் திட்டப் பணிகள் முடிந்த பின் சோதனை ஓட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் சிறந்த தரத்திலான காகிதக்கூழ் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 500 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்