Published on 03/12/2018 | Edited on 03/12/2018

உத்திர பிரதேசத்தின் ப்ரயாக்ராஜ் நகரத்தில் வரும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை திருமணங்கள் நடத்த கூடாது என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆணை வெளியிட்டுள்ளார். வரும் ஜனவரி முதல் மார்ச் வரை மூன்று மாதங்களுக்கு ப்ரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடைபெற உள்ளது. இதனால் அங்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த மூன்று மாதங்களில் அங்கு நிறைய பக்தர்கள் வருவார்கள் என்பதால் அங்கு திருமணங்கள் நடத்த கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே அங்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தவர்கள் வேறு மாவட்டங்களுக்கு திருமணத்தை மாற்றி வருகின்றனர்.