Published on 12/12/2018 | Edited on 12/12/2018
5 மாநிலங்களிலும் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களின் முடிவுகளும் நேற்றே வெளியாகின. மத்தியபிரேதசத்தின் முடிவுகள் தற்போதுதான் வெளியாகின. இந்த 5 மாநிலங்களிலும் நோட்டா பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?
சத்தீஸ்கரில் 2 சதவீத வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. அதன்படி மொத்தம் 2,82,744 வாக்குகள் நோட்டாவிற்கு சென்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 1.4 சதவீத வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. மொத்தம் 5,42,295 வாக்குகள் சென்றுள்ளது.
மிசோரத்தில் 0.7 சதவீத வாக்குகள் அதாவது 2,917 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் 4,67,781 வாக்குகள் அதாவது மொத்த வாக்குகளில் 1.3 சதவீதம் நோட்டா பெற்றுள்ளது.
தெலுங்கானாவில் 2,24,709 வாக்குகள் நோட்டா பெற்றுள்ளது. இது 1.1 சதவீதமாகும்.