Skip to main content

பட்ஜெட் தாக்கம்... என்னென்ன பொருட்கள் விலை ஏறும்..? விலை இறங்கும்..?

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

BUDGET 2021

 

2021-2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரிவிதிப்புககளும், வரிக்குறைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் பல்வேறு பொருள்களின் விலைகள் ஏறவும், இறங்கவும் உள்ளது.

 

இந்த பட்ஜெட்டினால் விலையேறவுள்ள பொருட்கள்:
 

பருத்தி, மொபைல் ஃபோன்கள், மொபைல் சார்ஜர்கள், ரத்தினக் கற்கள்,  எல்.ஈ.டி சாதனங்கள், எத்தனால், கச்சா பாமாயில், கார்கள், மின்னணு உபகரணங்கள், தோல் பொருட்கள், காலணிகள், வீட்டு உபகரணங்கள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும். கம்ப்ரசர்களுக்கான சுங்க வரி உயர்வால், குளிர்சாதனப்பெட்டிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ/சி விலையும் உயர வாய்ப்புள்ளது. பாதுகாப்பு கண்ணாடிகளின் மீதான சுங்க வரி உயர்வால் மோட்டர் வாகனங்களின் விலையும் அதிகரிக்கும்.

 

இந்த பட்ஜெட்டினால் விலைகுறையவுள்ள பொருட்கள்:
 

நைலான் உடைகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றின் விலை குறையவுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 12.5-ல் இருந்து 7.5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை குறைவு சாத்தியமாகியுள்ளது. மேலும், ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்களின் விலையும் குறையவுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்