எது உண்மையான சிவசேனா என கண்டறியும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சிவசேனா கட்சியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், தனிக்குழுவாகச் செயல்பட்டு வரும் நிலையில், அக்குழு பா.ஜ.க.வுடன் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புகள் தாங்களே உண்மையான சிவசேனா என கூறி வருகின்றன.
இந்த நிலையில், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என நிரூபிப்பதற்கான ஆவணங்களை வரும் ஆகஸ்ட் 8- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு முறையீட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யும் விவகாரம், உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அதன் மீது முடிவெடுக்கும் வரை, தேர்தல் ஆணையம் இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.