காதலித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
![uttarpradesh acid incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/db-QXoWVsQ3e0iISyXWMa5eP4Au1JtBM_TE917HMxTw/1572090153/sites/default/files/inline-images/acid_0.jpg)
உத்தர பிரதேசத்தில் அலிகார் நகரில் ஜீவன்கார் பகுதியில் வசித்து வருபவர் பைசாத் (20). இவர் அதேபகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக அந்த பெண்ணுடன் பேசுவதை பைசாத் தவிர்த்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் சந்தேகமடைந்து, உடனே திருமணம் செய்துகொள்ள கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கு பைசாத் ஒப்புக்கொள்ளாததையடுத்து அந்த பெண் பைசாத்தின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளதாக பைசாத்தின் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். கண்கள் இரண்டும் பாதிக்கப்பட்ட நிலையில், முகம் சிதைவடைந்து பைசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து 326 ஏ என்ற பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்து இளம்பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.