உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், 7 ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவு காரணமாக தெலலிங்கா ஆற்றில் திடீரென கடுமையான நீர்வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் சிக்கிப் பலியான 35 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அதில் 10 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 204 பேரைக் காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், தபோவன் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்களையும் மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் அங்கு மீட்புப்பணிகள் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ரிஷிகங்கா ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததால் சாமோலி மாவட்டத்தில் மீட்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதோடு, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவுலி கங்கா நதியில், நீர்மட்டம் சிறிய அளவில் அதிகரித்ததால் தபோவன் சுரங்கத்திலும் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
தபோவன் சுரங்கத்தில் 25 முதல் 35 பேர் வரை சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.