Union Finance Minister explains petrol, diesel price hike at state level

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க, தொடர்ந்து செலவிட வேண்டி உள்ளதால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். ரஷ்யா- உக்ரைன் போர் நீண்ட நாட்களாக நடந்தாலும், இந்தியாவில் தற்போது தான் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது என்பது முற்றிலும் உண்மையல்ல என அவர் கூறினார்.

Advertisment

10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாய் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டது என்றும், அந்த கடனைத் திரும்ப செலுத்துவதற்காகதான், மக்கள் இப்போதும் பணம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

எண்ணெய் பத்திரங்களை மீட்க, 2026- ஆம் ஆண்டு வரை செலவிட வேண்டியுள்ளதால், அதற்காக இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மக்கள் கூடுதல் வரிச் செலுத்த வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு, அவற்றிற்கு விதிக்கப்படும், அதிக வரியே காரணம் என விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், எண்ணெய் பத்திரங்கள்தான் காரணம் என்ற விளக்கத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு அளித்து வருகிறது.