இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா குறித்த எந்தவொரு தவறான தகவல்களையும் யாரும் பரப்ப வேண்டாம் என்று அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது.
மத்திய அரசின் இந்த அறிவுரைகளுக்கு முரணாகப் பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரகத் தொழில்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஒரு அப்பள பிராண்டை சில வாரங்களுக்கு முன்பு விளம்பரப்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. 'பாபிஜி அப்பளம்' என்ற அப்பள பிராண்டை அறிமுகப்படுத்தி அவர் பேசிய அவர், கரோனா வைரஸிற்கான ஆன்டிபாடிகளை உருவாக்க இந்த பிராண்ட் அப்பளம் உதவும் எனவும், கரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்க உதவும் பொருட்கள் இந்த அப்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறி இருப்பார். இந்நிலையில் அப்பளம் சாப்பிட்டு கரோனாவை விரட்ட சொன்ன மத்திய அமைச்சருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.