உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 96 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களின் எல்லைகளை மூடவும், மாநிலங்களை விட்டு மாநிலங்களுக்கு மக்கள் இடம்பெயராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ்கவுபா, நாடு முழுவதும் ஏப்ரல் 14- ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்தார்.