Published on 26/08/2019 | Edited on 26/08/2019
ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக முக்கிய உலக தலைவர்கள் அனைவரும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் குழுமியுள்ளனர். இதில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடியும் பாரிஸ் சென்றுள்ளார்.
இந்த மாநாட்டுக்கு இடையே இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின் போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் பற்றியும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், "இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளின் நிலை குறித்து இந்தியாவுக்கு கவலை இல்லை. காஷ்மீர் விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயானது" என தெரிவித்தார்.