![gfhx](http://image.nakkheeran.in/cdn/farfuture/PsT8fUSw5AcVRV4ZWYBfgKzH1AOHGsjg1Z_3lH0oHn8/1548159466/sites/default/files/inline-images/Andhra_police_-std.jpg)
மருத்துவமனையில் உயிருக்கு போராடியவருக்கு உறுப்புமாற்று அறுவைசிகிச்சைக்காக அரை மணிநேரத்தில் இதயத்தை கொண்டுசென்ற சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலங்கானாவின் செகந்திராபாத் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு இதயமாற்று அறுவைசிகிச்சை செய்வதற்காக ஹைதராபாத் விமானநிலைய பகுதியிலிருந்து இதயமானது ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 35 கிலோமீட்டர் பயண தூரமானது 30 நிமிடங்களில் கடக்கப்பட வேண்டும் என்ற கட்டத்தில், அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் துரிதமாக செயல்பட்டு ஆம்புலன்ஸ் செல்வதற்கான வழியை ஏற்படுத்தினார். 35 கிலோமீட்டரில் ஒரு இடத்தில கூட ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் திட்டமிட்டபடி மருத்துவமனையை சென்றடைந்தது. நேற்று மதியம் 12.33 க்கு இதயத்துடன் கிளம்பிய ஆம்புலன்ஸ் 1.03 மணிக்கு திட்டமிட்டபடி 35 கிலோமீட்டரை கடந்து மருத்துவமையை அடைந்தது. ஆம்புலன்ஸை ஒரு இடத்தில கூட நிற்க வைக்காமல் அதற்காக சரியான முறையில் போக்குவரத்தை மாற்றியமைத்த போக்குவரத்து காவலர்களுக்கு மாநிலம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றது.