21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்று தெலுங்கானா மாநிலத்தில் தொழில் முனைவோர் மாநாடு ஒன்றை தொடங்கி வைத்த அவர், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கடுமையாக தாக்கி பேசினார். 2030க்குள் இந்தியா பொருளாதாரத்தில் வல்லரசு என்ற தலைப்பில் பேசிய அவர், வரும் ஆண்டிற்குள் 10 சதவீத வளர்ச்சியை அடைந்தால் தான் இந்த வல்லரசு என்ற கனவை நனவாக்க முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் என்பது மத்திய அரசு 2017ம் ஆண்டு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரிவிதிப்புதான் என்றார். மேலும் முதலீட்டாளர்களுக்கு வரிமான வரி மூலம் நெருக்கடி தரக்கூடாது என்றும் அவர் கூறினார். ஜிஎஸ்டி தொடர்பார அவர் பேசிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.