கேரள மாநில திருச்சூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர்கள் மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, வழியில் உணவு உண்பதற்காக அடிமாலி பகுதியில் சுற்றுலா பேருந்தை நிறுத்தியுள்ளனர். அப்போது, பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டு மாணவர்கள் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கத்துறை அலுவலகத்திற்கு சென்று, புகைபிடிக்க வேண்டும் என்று கூறி தீப் பெட்டி கேட்டுள்ளனர். இதனால் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது சீருடையில் சுங்கத்துறை ஆய்வாளர் திடீரென உள்ள வர, பதற்போன மாணவர்கள் சற்றே நிதானத்திற்கு வந்துள்ளனர். பின்னர் தாங்கள் வந்தது சுங்கத்துறை அலுவலகம் என்று உணர்ந்த அவர்கள் உடனடியாக அங்கிருந்த தப்பிக்க முயன்றனர். பின்னர் இருவரையும் மடக்கிப் பிடித்த ஆய்வாளர், அவர்களிடம் சோதனை நடத்தினார். அவர்களிடம் 5 கிராம் கஞ்சா, மற்றும் கஞ்சா பீடி சிக்கியது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்த சுங்கத்துறை அதிகாரிகள் மாணவர்களை எச்சரித்து ஆசிரியர்களுடன் அனுப்பி வைத்தனர்.