நாய்கள் மருத்துவமனையில் உள்ள படுக்கைகளில் படுத்துக்கொள்வதால் நோயாளிகளுக்கு படுக்கை வசதி கிடைப்பதில்லை என பிஹார் மாநிலம் நவாடா மாவட்ட அரசு மருத்துவமனை குறித்து அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் உள்ள கட்டில்களில் அங்குள்ள தெரு நாய்கள் படுத்துக்கொள்கின்றன என்றும், இதனால் நோயாளிகள் படுக்கையின்றி வராண்டாக்களில் படுத்திருக்கும் நிலை அங்கு நிலவுகிறது. இது குறித்து அந்த மருத்துவமனையில் இருந்த நோயாளி ஒருவர் கூறுகையில், 'இங்குள்ள கட்டில்கள் அனைத்தையும் பெரும்பாலும் தெருநாய்களே ஆக்கிரமித்துள்ளன. இதனால் நோயாளிகளான எங்களுக்குப் படுக்கைகள் வழங்கப்படுவதில்லை. நாங்கள் குளிருக்காக போர்வை கேட்டால் மருத்துவமனை நிர்வாகம் தருவதில்லை. ஆனால், அங்கு உள்ள நாய்களுக்குப் போர்வை இருக்கிறது' என்றார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் பதிலளித்த போது, 'இது தொடர்பாக விசாரனை நடத்தி வருகிறோம். இது எப்படி நடந்தது, யார் காரணம் என்பதை அறிந்து, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.