Skip to main content

விமான பயணிகளுக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசின் அறிவிப்பு!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

flight

 

இந்தியாவின் உள்ளூர் விமான கட்டணத்தில் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களின் குறைந்தபட்ச டிக்கெட் விலையில் மத்திய அரசு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் உள்நாட்டு விமானங்களின் அதிகபட்ச விலையில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

இதனையடுத்து உள்நாட்டு விமான கட்டணம் அதிகரிக்கவுள்ளது. இதனால் உள்நாட்டு பயணத்திற்கு விமானத்தை பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

அதேபோல் உள்நாட்டு விமானங்களில் 80 சதவீத பயணிகளை அனுமதிக்கலாம் என ஏற்கனவே அமலில் உள்ள விதி, மார்ச் 31 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்