ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வாங்கினால் அவர்களுக்கு ஆறு கோடி பரிசளிக்கப்படும் என்று உ.பி அரசு அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் வருகின்ற ஜூலை மாதம் ஜப்பானில் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் ஜப்பானுக்கு வருகை தர இருக்கிறார்கள்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு அம்மாநில முதல்வர் பம்பர் பரிசை அறிவித்துள்ளார். அதன்படி ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஆறு கோடி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெள்ளி பதக்கம் வாங்குபவர்களுக்கு 4 கோடியும், வெண்கலப் பதக்கம் வாங்குபவர்களுக்கு 2 கோடியும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.