Skip to main content

அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டிக்கொள்ளட்டும்!: ஷியா வக்ஃபு வாரியம்

Published on 08/08/2017 | Edited on 08/08/2017
அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டிக்கொள்ளட்டும்!: ஷியா வக்ஃபு வாரியம்

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு விவகாரம் குறித்த வழக்கில் ஷியா வக்ஃபு வாரிய அமைப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.



அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான, இந்துக்கள் ராமரின் ஜென்ம பூமி எனக்கூறும் பகுதியில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளட்டும். ராமர் கோவிலும், மசூதியும் ஒரே இடத்தில் இருந்தால் அது மேலும் சர்ச்சையை வளர்க்கும் செயலாக அமையும். எனவே, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், மசூதியை நாங்கள் கட்டிக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு குறித்த உரிய தீர்வுகாண உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழு அமைக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், வழக்கு குறித்த விசாரணை ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு விவகாரம்:

16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இந்து அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்தியது.

2010-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய அந்த இடத்தை ராமர் பிறந்த இடம், நிர்மோகினி அக்காடா மற்றும் சன்னி வக்ஃபு வாரிய அமைப்பு என மூன்றாகப் பிரித்து அறிவித்தது. 

ஆனால், அந்த இடம் சன்னி அமைப்பிற்கானது அல்ல, எங்களுடையது என ஷியா அமைப்பு இன்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் பேச்சுவார்த்தையின் மூலமாக மட்டுமே நல்ல தீர்வைப் பெறும். பொது சமூகமும் அதைத்தான் விரும்புகிறது என ஷியா அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்