Skip to main content

எருமை மாட்டை வரதட்சணையாக கேட்டு கொடுமை செய்த குடும்பம்!

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

dowry
மாதிரி படம் 

 

எருமை மாடை வரதட்சணையாக கேட்டு பெண்ணை கொடுமை செய்த குடும்பத்தார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

திருமணங்களில் வரதட்சணையை ஒழிக்க பல்வேறு தரப்பினரும் போராடியும், விழிப்புணர்வும் ஏற்படுத்திவருகின்றனர். ஆனால், இன்னும் வரதட்சணை முறை தொடர்ந்து கொண்டு வருகிறது. வரதட்சணை பிரச்சனையால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதும், திருமணங்கள் நிற்பதும், திருமண முறிவுகளும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதேபோல், தற்போது, மும்பையில் எருமை மாடு வரதட்சணையாக கேட்டு தருவதற்கு தாமதமானதால் விவாகரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது.
 

 

bafalo

 

மும்பை, பாடன் நகரில் திருமணமான 4 ஆண்டுகள் ஆகியும் வரதட்சணையாக எருமைமாடு கொடுக்காததால் கணவர் தனது மனைவிக்கு முத்தலாக் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்தனர். 

 

மும்பை, பாடன் நகரில் உள்ள ரம்ஜான்பூரில் வசிப்பவர் சமீருதீன். இவர், கடந்த 2017ம் ஆண்டு புல்பனோ என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களிலேயே சமீருதீன் குடும்பத்தினர், புல்பனோவை குறைவாக வரதட்சணை கொண்டு வந்ததாக கூறி துன்புறுத்தியுள்ளனர். மேலும், சமீருதீன் குடும்பத்தார், புல்பனோவை 1 லட்சம் ரூபாயும், ஒரு எருமை மாட்டையும் கொண்டு வரச்சொல்லியும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில்,  புல்பனோ நீதிமன்றத்தை நாடினார். அதன்பின் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் சமீருதீன் குடும்பத்தாரை கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

IND vs ZIM : ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
IND vs ZIM : India beat Zimbabwe and win

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (07.07.2024) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் இந்தியாவுக்காக தனது முதல் டி20 போட்டியில் இன்று களமிறங்கினார். இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இருப்பினும் சதம் அடித்த அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதே சமயம் தனது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியிலேயே முதல் சதத்தை அடித்து அபிஷேக் சர்மா ரசிகர்களின் கவனத்தைத் தனது பக்கம் திருப்பியுள்ளார். இதனையடுத்து இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 8 சிக்சர்களுடன் 100 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ரன்களும், ரிங்கு சிங் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் விளாசி அசத்தினர். இந்திய அணியின் அதிரடி பேட்டிங் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

IND vs ZIM : India beat Zimbabwe and win

இதனையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியில் வெஸ்லே 43 ரன்களும், லூக் ஜாங்வே 33 ரன்களும், ப்ரையன் பென்னட் 26 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஜிம்பாப்வேக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஆவேஷ் கான் 3, முகேஷ் குமார் 3, ரவி பிஷ்னோய் 2 விக்கெட்கள் எடுத்தனர். நேற்று (06.07.2024) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இன்று வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

IND vs ZIM : இந்திய அணி அதிரடி பேட்டிங்! 

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
IND vs ZIM : Indian team batting action

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (07.07.2024) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் இந்தியாவுக்காக தனது முதல் டி20 போட்டியில் இன்று களமிறங்கியுள்ளார்.

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இருப்பினும் சதம் அடித்த அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதே சமயம் தனது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியிலேயே முதல் சதத்தை அடித்து அபிஷேக் சர்மா ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் திருப்பியுள்ளார்.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ரன்களும் ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ரன்களும், ரிங்கு சிங் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் விளாசி அசத்தியுள்ளனர். இந்திய அணியின் அதிரடி பேட்டிங் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.