Skip to main content

126 ஆண்டுகளில் முதன்முறையாகப் பாட்டா நிறுவன சி.இ.ஓ. பதவியில் இந்தியர்...

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

sandeep kataria to be ceo of bata

 

 

பாட்டா நிறுவனத்தின் சர்வதேச தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் கட்டாரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

 

செக் குடியரசு நாட்டை சேர்ந்த பாட்டா நிறுவனம் 1894 முதல் காலணி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. காலணி சந்தையில் உலகின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான பாட்டாவில், இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் கட்டாரியா சர்வதேச தலைமை செயல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பதவிவகித்து வந்த அலெக்சிஸ் நசார்ட் பதவி விலகும் சூழலில், சந்தீப் கட்டாரியா தலைமை செயல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

வோடஃபோனின் இந்தியா மற்றும் ஐரோப்பியப் பிரிவிலும், யூனிலீவர், யூம் பிராண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களிலும் 24 ஆண்டுகள் பணியாற்றிய சந்தீப் கட்டாரியா கடந்த 2017 ஆம் ஆண்டு பாட்டாவின் இந்திய பிரிவுக்குத் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், தற்போது அவர் சர்வதேச தலைமை செயல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாட்டா நிறுவனத்தின் 126 ஆண்டுகால பயணத்தில் இந்தியர் ஒருவர் சர்வதேச தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுத்து இதுவே முதன்முறை ஆகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5ஜி அலைக்கற்றை: முதல் நாளில் ரூபாய் 1.45 லட்சம் கோடிக்கு ஏலம்!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

5G Spectrum: Bidding for Rs 1.45 Lakh Crore on First Day!

 

5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் 1.45 லட்சம் கோடி ரூபாய்க்கு நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளனர். 

 

அதிவேக தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று (26/07/2022) தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. முதல் நாளில் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெற்ற ஏலத்தில் 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்குவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தனர். 

 

ஏலத்தின் முதல் நாளில் 1.45 லட்சம் கோடி ரூபாய்க்கு நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளனர். இது கடந்த 2015- ஆம் ஆண்டைக் காட்டிலும் ரூபாய் 37,000 கோடி அதிகமாகும். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னிலையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்றும் நடைபெறவுள்ளது. 

 

வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதிக்குள் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வரும் செப்டம்பர் மாதம் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

Next Story

5ஜி தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்! 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Highlights of 5G Technology!

 

இணையதள வேலைகளை எளிதாக்குவது முதல் அனைத்து விதமான சேவைகளையும் விரைவாக பெற உதவும், 5ஜி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம். 

 

உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. 2023- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 83.5 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறும் நிலையில், 5ஜி தொழில் நுட்பத்திற்கான தேவையை எளிதில் புரிந்து கொள்ளலாம். 

 

ஐந்தாம் தலைமுறைக்கான அலைவரிசையை அடிப்படையாகக் கொண்ட இணைய தொழில்நுட்பமே 5ஜி. இது முந்தைய 4ஜி எனப்படும் நான்காவது தலைமுறைக்கான தொழில்நுட்பத்தைவிட பன்மடங்கு வேகத்துடன் கூடிய பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றத்தைக் கொண்டிருக்கும். அதாவது, 3ஜி, 4ஜி கால்வாய் நீர் போன்றது என்றால், 5ஜி அதிகமாக வெள்ளம் ஓடும் ஆறுபோல இருக்கும். 

 

உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு 47.5 Mbps வேகம் கிடைக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 11.5Mbps வேகம் இருப்பதாகவும், சர்வதேச இணைய வேக ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தில் அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7 Gbps பதிவிறக்க வேகமும், 3 Gbps பதிவேற்ற வேகமும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

 

5ஜி தொழில்நுட்பத்தில் பெரிய கோப்புகளை ஒரு நொடியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். எந்தவொரு திரைப்படத்தையும் ஒரு சில நொடிகளில் அதிவேகத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். போக்குவரத்து, விவசாயம், சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, தளவாடம் ஆகியவற்றில் வளர்ச்சியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. 

 

அதுமட்டுமின்றி, விளையாட்டு, பொழுதுபோக்குச் சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் செயல்களின் பயன்பாட்டை அதிகரிக்கும். 5ஜி, கிளவுட் கம்பியூட்டிங், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.