வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறிய மக்களை அடையாளம் காண அறிமுகம் செய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவுப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2018 ஜூலை 30ல் வெளியிடப்பட்ட வரைவுப்பட்டியலில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டதால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அசாமில் வசிக்கும் மொத்த மக்களில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெயர் இந்த குடிமக்கள் பதிவேட்டின்(NRC) இறுதிப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் பட்டியலில் பெயர் இல்லை என்ற வதந்தியால் சோனிபுட் மாவட்டத்தில் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அரசு மூலமாக அமைக்கப்பட உள்ள தீர்ப்பாயங்கள் மூலமாக அவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபித்தால் பட்டியலில் பெயர் இணைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் அந்த பெண் பட்டியலில் பெயர் இல்லாததால், வெளிநாட்டினர் என முத்திரை குத்தப்படுவோம் என்ற பயத்தினால் உயிரைவிட்டதாக கூறப்படுகிறது.